News September 12, 2025
திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல்: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர்கள் அருகமையில் இருக்கும் இ-சேவை மையத்தின் வாயிலாக இவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
திண்டுக்கல்: மிளகாய் பொடி தூவி நகைக் கொள்ளை!

திண்டுக்கல்: பாகாநத்தத்தில் கூரைக் கொட்டகையில் டீக்கடை நடத்தியபடி தனியே வசிப்பவர் அய்யம்மாள்(87). நேற்று(செப்.11) அதிகாலை 4:30 மணிக்கு கடையை திறந்த போது 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதில், கரூரில் தலைமறைவாக இருந்த பாகாநத்தத்தை சேர்ந்த 35 வயது பெண், அவரது மகனான 12ஆம் வகுப்பு மாணவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News September 12, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

▶️திண்டுக்கல் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
▶️இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
▶️இதற்கு <
▶️ உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 12, 2025
திண்டுக்கல்லில் மின் ரத்து அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(செப்.12) வளவிசெட்டிபட்டி, குரும்பபட்டி, வடுகபட்டி, இன்னாசிப்பட்டி, காரியாபட்டி, சித்தரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பெரும்பாறை, கதிரநாயக்கன்பட்டி, எம்,வாடிப்பட்டி ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9:00 மணி முதல் மலாஇ 5:00 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.