News December 1, 2025

திண்டுக்கல்: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

image

திண்டுக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 3, 2025

பழனி அருகே தொழிலாளி விபரீத முடிவு

image

பழனியை அடுத்த சின்ன கலையம்புத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

திண்டுக்கல் மக்களே உஷார்: பல லட்சம் மோசடி!

image

வத்தலக்குண்டு வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் தன் மகன்கள் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.36.10 லட்சம் பணத்தை கரூர் குமார், நிலக்கோட்டை மாரிமுத்துவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர்கள் தலை மறைவாகினர். இதுகுறித்து மாரிமுத்து, குமார், உட்பட 4 பேர் மற்றும் இதில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த கவுரிசங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

News December 3, 2025

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!