News April 15, 2024
திண்டுக்கல்: கண்டுகொள்ளாத சொந்தக்கட்சி

பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் ராமதாஸ் மாநில தலைவர் அன்புமணி கவுரவத் தலைவர் கோ . க. மணி உள்ளிட்ட யாரும் இதுவரை வரவில்லை. பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திலகபாமா தனித்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 6, 2025
திண்டுக்கல்: இதை செய்தால் பணம் போகும்!

திண்டுக்கல் மக்களே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. அதாவது, WhatsApp, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி E-Challan மெசேஜ்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருங்க மக்களே! இதை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 6, 2025
திண்டுக்கல்லில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (நவம்பர் 6) நடைபெற உள்ள இடங்கள்: திண்டுக்கல் மாநகராட்சி – நாகல்நகர், சௌராஷ்டிரா சபை நூற்றாண்டு விழா மண்டபம்; ஒட்டன்சத்திரம் – தங்கச்சியம்மாபட்டி பிளோரிஷிங் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி; பழனி – வடக்கு தாதநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம்; நத்தம் – பரளிப்புதூர் அழகாபுரி மந்தை திடல்; ரெட்டியார்சத்திரம் – தர்மத்துப்பட்டி எம்.ஆர் திருமண மண்டபம்.
News November 6, 2025
திண்டுக்கல்: வேளாண் குறை தீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை வேளாண் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைத்து தீர்வு பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.


