News September 28, 2025

திண்டுக்கல்: கணவரை எரித்துக் கொன்ற மனைவி

image

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே, கணவர் சுப்பையா (55) என்பவரை எரித்துக் கொன்ற மனைவி தனலட்சுமி (39), நாடகமாடிய பிறகு இன்று எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தக் கொலை சம்பவத்தில் தனலட்சுமியின் ஆண் நண்பரும் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக எரியோடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Similar News

News January 5, 2026

திண்டுக்கல்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை! APPLY

image

திண்டுக்கல் மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். (SHARE செய்யுங்க)

News January 5, 2026

திண்டுக்கல்லில் இப்பகுதியில் மின்தடை

image

திண்டுக்கல்லில் இன்று(ஜன.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, அனுமந்தராயன்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News January 5, 2026

திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி

image

திண்டுக்கல், குட்டியப்பட்டியில் உலக அளவிலான சேவல் கண்காட்சி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேவல் வளர்ப்பாளர்கள் கலந்து சேவல்களை காட்சிப்படுத்தினர். இதில், சிறந்த சேவல்களுக்கு எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, கிரைண்டர் என 100 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!