News August 9, 2024

திண்டுக்கல்: கணவரின் டூ வீலரை திருடிய மனைவி தலைமறைவு

image

பட்டிவீரன்பட்டியில் கணவரை பழிவாங்க அவரின் விலை உயர்ந்த டூவீலரை ஸ்கெட்ச் போட்டு திருடிய மனைவி தலைமறைவான நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தன்னை பிரிந்து சென்ற கணவர் எழில்மாறன் விலை உயர்ந்த டூவீலரில் ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்து கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, உறவினர்கள் உதவியுடன் டூவீலரை திருடியது தெரிந்தது. டூ வீலரை கைப்பற்றிய போலீசார் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தனர்.

Similar News

News October 30, 2025

திண்டுக்கல் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை நாளை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

திண்டுக்கல்: நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (30.10.2025) நடைபெறுகிறது. மாவட்டத்தின் ஆத்தூர் தொகுதியில் குத்துக்காடு பொது மைதானம், நத்தம் தொகுதியில் குட்டுப்பட்டி மந்தை திடல், தொப்பம்பட்டி வட்டாரத்தில் மேல்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்சத்திரம் தொகுதியில் சீலைக்காரி அம்மன் மண்டபம்

News October 29, 2025

திண்டுக்கல்: மதுபான கடைகள் தற்காலிகமாக மூடல்!

image

இராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட எல்லையோரம் உள்ள கொடைரோடு, பள்ளப்பட்டி, கிருஷ்ணாபுரம், விளாம்பட்டி, அணைப்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, விருவீடு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் கூடங்கள் இன்று மாலை 6 மணி முதல் நாளை முழுவதும் மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவு.

error: Content is protected !!