News June 4, 2024
திண்டுக்கல் கட்சியினருக்கு முன்னால் எம்எல்ஏ அழைப்பு

திண்டுக்கல் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருவதால் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திண்டுக்கல் காமராஜர், பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வருக என முன்னாள் எம். எல். எ. அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 12, 2025
திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல்: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர்கள் அருகமையில் இருக்கும் இ-சேவை மையத்தின் வாயிலாக இவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்து பலி

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அருகே அருள்சாமி (65) என்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்சாமியின் உடலை மீட்டனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
News September 11, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.10) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.