News October 17, 2025
திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

1)திண்டுக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2)அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3) ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 18, 2025
திண்டுக்கல்லில் இப்படியும் மோசடி? உஷார்

ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம், சேலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 49) என்பவர் தன்னைப் பிரபல பிராண்ட் அரிசியின் ஏஜென்ட் என அறிமுகப்படுத்தி ரூபாய் 7,20,000/- பணத்தைப் பெற்றுக்கொண்டர். ஆனால் அதற்கான அரிசியை அனுப்பாமல் வியாபாரிகளை ஏமாற்றி வந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
News October 18, 2025
திண்டுக்கல்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News October 18, 2025
திண்டுக்கல் பிரபல ரவுடி கூட்டாளி திடீர் மரணம்..!

மதுரையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரை கடத்தி வழக்கில் கைதாகி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.