News March 24, 2024
திண்டுக்கல்: இருவர் மீது சரமாரி தாக்குதல்

பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், மணி ஆகிய இருவரும் நேற்று சாலையில் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியே மதுபோதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் ரத்தகாயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
திண்டுக்கல்: சிலிண்டர் விலையை விட அதிகம் கேட்கிறார்களா?

திண்டுக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News August 24, 2025
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஆக.26-ல் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் வருகிற 26 முதல் செப்.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள் மட்டும், ஆதாா் நகல், பிறந்த தேதி சான்று, பள்ளி, கல்லூரியில் பயில்வதற்கான சான்று, வங்கிக் கணக்குப் புத்தக நகல், அரசு ஊழியா்கள் பணிபுரிவதற்கான அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம். மேலும் விளையாட்டுச் சீருடை, காலணியுடன் வர வேண்டும்.
News August 24, 2025
திண்டுக்கல்லில் கரண்ட் பில் அதிகமா வருதா?

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.