News October 14, 2025
திண்டுக்கல்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
Similar News
News October 14, 2025
விவசாயிகளுக்கு அடையாள அட்டை அவசியம்!

மத்திய அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையைப் பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை அவசியம் என வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 75 ஆயிரம் விவசாயிகளில் 16,539 பேர் இதுவரை அட்டை பெறவில்லை. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் வழங்கப்படும் 21வது தவணைத் தொகை பெற, ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் உடனே அட்டை பெற வேண்டும் என கூறினார்.
News October 14, 2025
திண்டுக்கல்: Mobile-ல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே!
News October 14, 2025
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.8,000 (உதவித்தொகை ரூ.7,500 + மருத்துவப்படி ரூ.500) வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆண்டுதோறும் 100 பேருக்கு வழங்கப்பட்ட இத்திட்டம், இப்போது 150 பேருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 17.11.2025க்குள் www.tamilvalarchithurai.tn.gov.in அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் நேரடியாக அளிக்கலாம்.