News September 27, 2025

திண்டுக்கல்: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

திண்டுக்கல் மக்களே.., வருகிற அக்.1ஆம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News January 8, 2026

ஒட்டன்சத்திரம் அருகே பெண் துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இருளகுடும்பன்பட்டியைச் சேர்ந்தவர் வஞ்சம்மாள் (67).இவர் நேற்று ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள தாராபுரம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக வஞ்சம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வஞ்சம்மாள், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்/

News January 8, 2026

கோயில் இடிப்பு: திண்டுக்கல்லில் வெடித்த போராட்டம்!

image

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் முருகன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பழனி ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

News January 8, 2026

திண்டுக்கல்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திண்டுக்கல் மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!