News October 31, 2025
திண்டுக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நவம்பர்-1ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் நில விவரங்கள் பதிவு செய்யாத விவசாயிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண் மற்றும் கைபேசி எண் போன்ற ஆவணங்களுடன் முகாம்களில் வந்து பதிவு செய்து திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.
Similar News
News October 31, 2025
திண்டுக்கல்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
திண்டுக்கல்: ஆதாருடன் பான் கார்டை இணைக்க எளிய வழி!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 31, 2025
நத்தம் அருகே கோர விபத்து; ஒருவர் பலி

நத்தம் அருகே சமுத்திராபட்டி பகுதியில், கணித போட்டிக்காக பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோவில் அரசு பேருந்து மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து நைனம்மாள் (43) உயிரிழந்தார். மாணவர்கள் திவ்யஶ்ரீ, குகன் உள்ளிட்ட 8 பேர் மற்றும் ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் நத்தம், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


