News November 13, 2025
திண்டுக்கல் அருகே வீடு புகுந்து துணிகர கொள்ளை!

திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியை சேர்ந்த பேட்டரி கடை அதிபர் ஜான்கிறிஸ்டோபர் (52) சென்னையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, ரூ.11,000பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.
Similar News
News November 13, 2025
திண்டுக்கல்: ரூ.ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில், காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி (PNB Local Bank Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News November 13, 2025
திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 300 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 13, 2025
பழனியில் தந்தை–மகன் அதிரடி கைது

பழனியில் கஞ்சா வைத்திருந்ததாக தந்தை–மகன் இருவரை போலீசார் கைது செய்தனர். பழனி–திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை விசாரித்ததில், அவர்கள் ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ஷாநாவாஷ் (46), மகன் சாது உசேன் (19) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


