News October 19, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: 17 வயது மாணவர் பலி!

image

தாடிக்கொம்பு, காமராஜபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் பரத் (வயது 17). நேற்று முன்தினம் தனது நண்பர்களான சபரீஸ்வரன் (18) மற்றும் கலையரசன் (18) ஆகியோருடன் டூவிலரில் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் சென்றுக் கொண்டு இருந்தனர். அப்போது டூவீலர் திடீரென நிலைதடுமாறி சாலையோரத் தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் பரத் பரிதாபமாக உயிரிழந்தார்.திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை!

Similar News

News October 21, 2025

திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்!

image

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(அக்.21) பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையில் சிறியளவு மாற்றம் காணப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.56, முருங்கைக்காய் ரூ.90, பச்சை மிளகாய் ரூ.80, பூண்டு ரூ.160 என விற்கப்படுகின்றன.

News October 21, 2025

திண்டுக்கல்லில் வாலிபர் கைது!

image

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(53). இவரது தோட்டத்தில் புகுந்த ஓர் மர்ம நபர்மின் கம்பிகளை துருடிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ்(26) என்பது தெரியவந்ததும், போலீசார் அவரைக் கைது செய்தனர்.

News October 21, 2025

நத்தத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல்: செந்துறை அருகே உள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(33). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த அக்.17ஆம் தேதி பெரியூர்பட்டி பகுதியில் மரம் வெட்டிக் கொடிண்டிருந்தார். அதில் மரத்துண்டு தலையில் விழுந்ததில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!