News April 3, 2024
திண்டுக்கல் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

திண்டுக்கல் அடுத்த குழந்தைபட்டியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பாலமுருகன் (32), பழனியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற ரயிலில் வந்தபோது ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே நேற்று ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
வெள்ளுமா திண்டுக்கல் டிராகன்ஸ்?

திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டி என்.பி.ஆர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன் அணியை எதிர்கொள்ளும்.
News July 4, 2025
திண்டுக்கல்: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்: மணியக்காரன்பட்டி அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன்பு சதீஷ், கஜேந்திரன் ஆகிய 2 பேர் சரணடைந்துள்ளனர்.
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.