News December 23, 2025
திண்டுக்கல் அருகே ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுகவை காப்பாற்ற ஜெ.தீபா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பஸ்நிலையம், மூன்றுலாந்தர், அவுட்டர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் அண்ணா, மற்றும் ஜெயலலிதா படங்களுடன் ஜெயலலிதாவின் ஒரே வாரிசு ஜெ.தீபா என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
திண்டுக்கல்: வங்கி மோசடி.. காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கி கணக்கின் மூலம் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளீர்கள் என உங்களது செல்போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். அதன்மூலம் உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற மோசடிகளுக்கு உள்ளானால் 1930 என்ற எண்ணையோ, www.cybercrime.gov.in இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர்!
News February 2, 2026
திண்டுக்கல்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <
News February 2, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

திண்டுக்கல் மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.


