News April 22, 2025
திண்டுக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News July 7, 2025
திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பின் தங்கிய பகுதிகளான குஜிலியம்பாறை, நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. மேலும், உபகரணங்கள் செலவில் 50% ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் தொழில் மையம்( 8925533943)ஐ அணுகலாம்.
News July 7, 2025
திண்டுக்கல்: பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே நேற்று(ஜூலை 6) நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, புலியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஜீப்பில் புலியூருக்கு திரும்பியபோது.
கோவில்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகிலுள்ள சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற குழந்தைராஜ் (38) உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News July 7, 2025
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி படு தோல்வி!

திண்டுக்கல்லில் இன்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 220 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் டிராகன்ஸ் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ரன்கள் மட்டுமே திரட்டி படுதோல்வியடைந்தது.
இதன்மூலம், முதல்முறையாக டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.