News March 25, 2024

திண்டுக்கல்லை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான வி.எம்.எஸ்.முகமது முபாரக், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் நிலவளம், நீா்வளம் முறையாக முறைப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வருவேன். இந்த தொகுதியின் உறுப்பினராக பொதுமக்கள் என்னைத் தோ்வு செய்தால், நாட்டிலுள்ள 543 தொகுதிகளிலும் முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல்லை மாற்றுவேன் என்றார்.

Similar News

News December 15, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: குழந்தை பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வங்கமனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை மாத வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை நேற்று இரவு திடீரென உயிரிழந்து விட்டது. குழந்தையின் திடீர் சாவு குறித்து, வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2025

திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!

News December 15, 2025

திண்டுக்கல்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!