News August 13, 2024

திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானிய திட்டங்கள், மானியத்தில் வழங்கப்படும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

Similar News

News March 6, 2026

திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

பழனியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிய பள்ளிவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்ததால் சிறுவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுமதி நகராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

News March 6, 2026

நத்தம் அருகே விபத்து; ஒருவர் உயிரிழப்பு

image

சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் இன்னாசி (65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி அமுதமேரியுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் கொசவபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். விராலிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்னாசி உயிரிழந்தார். அமுதமேரி சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!