News January 21, 2026

திண்டுக்கல்லில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற<> https://www.tnprivatejobs.tn.gov.in <<>>இணையதளம் மற்றும் 6381552624 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 27, 2026

வடமதுரை அருகே கொள்ளை

image

வடமதுரை, தென்னம்பட்டி சாலையோரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவில் உடைத்து உள்ளே இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். உண்டியலில் ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 27, 2026

திண்டுக்கல்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

திண்டுக்கல்லில் 3 பேர் அதிரடி கைது

image

திண்டுக்கல், பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது மகள்கள் பஞ்சவர்ணம், கருத்தம்மாள் ஆகிய மூவரையும், கடந்த 24-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே ஊரைச் சேர்ந்த விஜய், ஆறுமுகம், முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணிராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!