News August 25, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னஸ் தொடங்க மானியம்!

திண்டுக்கல் மக்களே ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News August 25, 2025
BREAKING: திண்டுக்கல்லில் ரூ.17 கோடி ஊழல்!

திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17 கோடி ஊழல் நடந்ததாக தணிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஆணையர் உட்பட 5 அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
News August 25, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் விழிப்புணர்வு புகைப்படம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் ஆகஸ்ட்-25 (சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும் முன் பின்னால் வாகனங்கள் வருகிறதா என நன்கு கவனித்த பின் வாகனத்தின் கதவை திறக்கவும்) என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News August 25, 2025
திண்டுக்கல்: திருமணத்திற்கு தங்கத்துடன் ரூ.50,000!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்யதவரா..? உங்களுக்கு தமிழக அரசின் ’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண உதவி’ திட்டத்தின் மூலம் ரூ.50,000, 4 கிராம் தங்கம் வழங்கப்படும். இதற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் தம்பதியில் மனைவி உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது அருகே உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!