News August 18, 2024
திண்டுக்கல்லில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று வழிபாடுகள் நடந்தன. அபிராமி அம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், சிறுமலை வெள்ளிமலை சிவன் கோயில், அகஸ்தியர்புரம் அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 6, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி!

திண்டுக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 6, 2025
JUST IN: திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

திண்டுக்கல், பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 6, 2025
திண்டுக்கல்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

திண்டுக்கல் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!


