News September 9, 2025

திண்டுக்கல்லில் பாலியல் தொல்லை!

image

திண்டுக்கல்: சிறுமலையில் கடந்த மாதம் ஓர் இளைஞரும், சிறுமியும் இருந்துள்ளனர். இதனைக் கண்ட வனத்துறையினர் இளைஞருக்கு அபராதம் விதித்து அனுப்பினர். ஆனால், அதற்கு பின்னர் அந்த சிறுமிக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. மேலும், திண்டுக்கல்லில் ஓர் பள்ளி மாணவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை தந்துள்ளார். இவைகள் குறித்து உடனடி நடவடிக்கை வேண்டி வக்கீல்கள் சங்கம் நேற்று(செப்.8) ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

Similar News

News September 9, 2025

திண்டுக்கல்: தவெக விஜய் வருகிறார்!

image

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிச.20ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News September 9, 2025

திண்டுக்கல்: வியாபாரியை ஏமாற்றிய மோசடிப் பெண்

image

திண்டுக்கல்: கோபால் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தான் ஏற்றுமதியாளர் என அறிமுகமான சேலத்தை சேர்ந்த சங்கீதா(38) பணத்தை தனக்கு அனுப்பி வைத்தால் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறேன் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்காச்சோளத்தை அனுப்பாமல் ஏமாற்றிய நிலையில், ராஜ்குமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News September 9, 2025

திண்டுக்கல்: மின் துறையில் சூப்பர்வைசர் வேலை!

image

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளன. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு<<>> கிளிக் செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!