News January 26, 2026
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டணம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, அம்பாத்துரை, அஞ்சுகம் காலனி, சமத்துவபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், உத்தனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News February 7, 2026
திண்டுக்கல்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

திண்டுக்கல் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
நிலக்கோட்டை கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சி!

திண்டுக்கல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்தும் நோக்கில் விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. நிலக்கோட்டை அரசு கலை கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், மாவட்ட மகளிர் உற்பத்தி செய்த பல்வேறு கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


