News January 5, 2025
திண்டுக்கல்லில் தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ்

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.ஏ திருமண மண்டபத்தில், லயன் இன்டர்நேஷனல் ராணி வேலு நாச்சியார் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் நசுருதின் மற்றும் மாவட்ட ஆளுநர் சசிகுமார் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தனியார் தொலைகாட்சி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 19, 2025
திண்டுக்கல்லில் இலவச பட்டா வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 19, 2025
திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.