News January 20, 2026
திண்டுக்கல்லில் தட்டித் தூக்கிய அமைச்சர்!

திண்டுக்கல் மாவட்டம் , தருமத்துப்பட்டி ஊராட்சி செவனக்கரையான்பட்டியை சேர்ந்த அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து ஏராளமானோர் நேற்று (ஜன.19) விலகி திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Similar News
News January 21, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, OLX, Quikr, CarDekho போன்ற ஆன்லைன் தளங்களில் வாகனம் வாங்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. முன்பணம் கேட்டல், போலி ஆவணங்கள் காட்டுதல், குறைந்த விலையில் ஆசை காட்டுதல் போன்ற வழிகளில் மோசடிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சரிபார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
திண்டுக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News January 21, 2026
திண்டுக்கல்லில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற<


