News May 28, 2024
திண்டுக்கல்லில் சிக்கியது 1.57 லட்சம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ. 1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய அமைச்சர் பெரியசாமி!

திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர் உரிமை மீட்பு நிர்வாகிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிர்வாகிகள் பசும்பொன் மற்றும் வைகை பாலன் தலைமையில் திரளானோர் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது முக்கிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். புதியதாக இணைந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
News March 3, 2026
திண்டுக்கல் கலெக்டர் அதிரடி ஆய்வு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டங்களில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 21,391 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடந்த தமிழ் பாடத் தேர்வை 21,052 மாணவர்கள் எழுதினர்; 339 பேர் வரவில்லை. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சரவணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
News March 3, 2026
வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் பேர் கைது!

வேடசந்தூர் அருகே சண்முகம் என்பவரைத் தாக்கி, 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த கதிர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


