News January 7, 2026
திண்டுக்கல்லில் குவிக்கப்பட்ட போலீஸ்!

திண்டுக்கல்லில் இன்று காலை 10:05 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், ரூ.1082.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.இதனை தொடர்ந்து மதுரை சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி திண்டுக்கல் டி.ஐ.ஜி., சுவாமிநாதன், எஸ்.பி., பிரதீப் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Similar News
News January 26, 2026
பழனி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

பழனி பாலசமுத்திரம் பகுதியில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான ரங்கமலை அடிவாரத்தில் உள்ள செக்காடும் பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. போகர் ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் தமிழ்நாயகன் அளித்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் ஸ்ரீராஜா, மனோகரன் ஆய்வு மேற்கொண்டனர். இது பாலசமுத்திர பாளையக்காரர் பொறிப்பித்ததாக தெரிவித்தனர்.
News January 26, 2026
திண்டுக்கல்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
திண்டுக்கல்லில் சோகம்: மின்சாரம் தாக்கி பலி!

உசிலம்பட்டி மெய்யம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் வாரந்தோறும் ஒட்டன்சத்திரம் கே.கே. நகரில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக நேற்று நடைபெற்ற மாட்டுச்சந்தைக்கு தனது லாரியை ஓட்டிக்கொண்டு இளங்கோவன் வந்தார். ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை அருகே லாரியை நிறுத்திவிட்டு இறங்கும் போதுமேலே சென்ற உயர் அழுத்தமின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இளங்கோவன் உயிரிழந்தார்.


