News April 14, 2025
திண்டுக்கல்லில் உள்ள இமயமலை !

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை இமயமலையின் ஒரு பகுதி என ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் பகுதியில் மிக உயரமான மலை என்றால் அது வெள்ளி மலை தான். இந்த மலையின் உச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தைக் காண அரைமணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து சென்றால் கைலாயத்தையே கண்ட ஒரு அனுபவம் உங்களுக்கு கிட்டும். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 31, 2026
எரியோடு அருகே பயங்கர விபத்து!

எரியோடு அருகே இன்று அதிகாலை தொட்டணம்பட்டி–நலமானார்கோட்டை இடையே சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் அடையாளம் தெரியாத நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
பழனியில் இன்று முதல் இலவசம்!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி, வ.உ.சி. பஸ் நிலையத்திலிருந்து கோவில் அடிவாரத்திற்குப் பக்தர்கள் சென்று வரக் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு, 3 அரசு டவுன் பேருந்துகள் மற்றும் 3 மினி பேருந்துகள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
News January 31, 2026
திண்டுக்கல்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


