News January 24, 2026
திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக கொள்ளை! அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அருளானந்த் சென்னை சென்றுள்ள நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடந்த 2018-லும் இவர் வீட்டில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின என்பது குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
திண்டுக்கல்: கடந்த ஆண்டு 73 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 73 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். அதில் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 34 பேரும், கொடைரோடு பகுதியில் 5 பேரும் ஆவர். அதேநேரம் கடந்த 2024-ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ரயிலில் அடிபட்டு 83 பேர் பலியாகினர். அந்த வகையில் கடந்த ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 10 குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 24, 2026
திண்டுக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.