News November 22, 2025
திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
திண்டுக்கல் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்லில், சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் போல பேசிக் கொண்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு!

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில், ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.