News November 19, 2025
திண்டுக்கல்லில் அதிர வைத்த விலை!

திண்டுக்கல்லில் கடந்த வாரம் முட்டை ஒன்று ரூ.6.50-க்கு விற்பனை ஆனது. ஆனால் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் நேற்றைய தினம் திண்டுக்கல்லில் ரூ.7-க்கு விற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்து இருப்பது, அசைவ உணவு பிரியர்களை அதிர வைத்து இருக்கிறது.உங்கள் பகுதியில் முட்டை விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!
Similar News
News November 19, 2025
திண்டுக்கல்” உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 19, 2025
திண்டுக்கல் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர்.
News November 19, 2025
நத்தத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி!

நத்தம்- கோலில்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம்(55). இவர் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கோபால்பட்டி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.நத்தம் தாலுகா அலுவலகம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்த பைக் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி கவிழ்ந்தது.இதில் 3 பேரும் காயமடைந்த சிகிச்சை பெற்ற நிலையில் தமிழ்ச்செல்வி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


