News November 8, 2025
திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சிறுவன் உட்பட 3 பேர் கைது!

திண்டுக்கல்: சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, சிவா (22), பிரகாஷ் (27) ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 8, 2025
திண்டுக்கல்: 10-வது படித்தால் அரசு வேலை.. நாளை கடைசி!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 8, 2025
திண்டுக்கல்: சிறுமியை சீரழித்த நபர்.. அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல்: நத்தம் அருகே தேத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (27). இவர் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார். நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் சந்திரனுக்கு மொத்தம் 30 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


