News March 26, 2025
திண்டுக்கல்லின் பேகம்பூர் வரலாறு

தென் இந்தியாவில் உள்ள முகலாய கலாசாரத்தின் எச்சங்களில் மிக முக்கியமான ஒரு இடம் திண்டுக்கல். ஆம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் என திண்டுக்கல்லை ஆண்ட முகலாய மன்னர்கள் பல முகலாய கலாசாரப் பதிவுகளையும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு இடம் ’பேகம்பூர்’. ஹைதர் அலியின் சகோதரி அமீருநிஷா பேகம் பிரசவத்தில் இறந்தார். அவர் இறந்த இடம் தான் ’பேகம்பூர்’ எனப் பெயரிடப்பட்டது.
Similar News
News November 5, 2025
திண்டுக்கல் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 5) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் குறைகள், மனுக்கள் பெறப்படும். பழனி நகராட்சியில் உடுமலை ஆயுரா வைஸ்யர் மடம், நிலக்கோட்டை வட்டத்தில் குல்லிசெட்டிபட்டி பொம்முச்சாமி திருமண மஹால், ரெட்டியார்சத்திரம் வட்டத்தில் அனுமந்தராயன் கோட்டை லொயோலா மண்டபம், சாணார்பட்டி வட்டத்தில் வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.
News November 4, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள காவல் உதவி எண்களை அழைத்து பயன்பெறுமாறு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
திண்டுக்கலில் ரேஷன் குறைதீர் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 08.11.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறும். குடும்ப அட்டை பெயர் சேர்த்தல்/நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய/நகல் அட்டை பெறுதல் மற்றும் ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.


