News November 5, 2025
திண்டுக்கல்;போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 5, 2025
திண்டுக்கல்: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ) <
News November 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு

அடுத்த மாதம் துபாயில் ரோல்பால் ஸ்கேட்டிங் உலகக் கோப்பைக்கான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கம் மாணவர் தீபக் ராஜா மற்றும் மாணவி மதுமிதா ஆகியோர் சீனியர் பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களை மாஸ்டர் பிரேம் நாத் மற்றும் விளையாட்டு ஆய்வாளர்கள் வாழ்த்தினர்.
News November 5, 2025
திண்டுக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.


