News May 1, 2024

திண்டிவனம்: இறந்தவரின் கண் தானம்

image

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட்
Ln. ஸ்மைல் ஆனந்த் ஏற்பாட்டில் இன்று (மே 1) கண் தானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் நல்லியகோடன் நகர் உமாபதி தெரு விரிவாக்கத்தில்
வசித்து வந்த
சென்னம்மாள் என்பவர் இயற்கை எய்தியதை தொடர்ந்து,
அம்மையாரின் கண்கள்
பார்வை குறைபாடுள்ள நாலு நபர்கள் பயன்பெறும் வகையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானமாக வழங்கப்பட்டது.

Similar News

News July 4, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

விழுப்புரம்: போதைப் பொருள் விழிப்புணர்வு – எஸ்.பி பாராட்டு

image

விழுப்புரம் மாவட்டத்தில் ‘ போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் பல்வேறு அறக்கட்டளை சார்பில் 57 அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பாராட்டி, மாவட்ட எஸ்.பி சரவணன் மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் சந்துருவை நேரில் அழைத்து பாராட்டினார். உடன் சரோஜினி கல்வி அறக்கட்டளை நிறுவனர் அருள்ராஜ் பங்கேற்றார்.

News July 4, 2025

சிறுமியின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்

image

செஞ்சி பேரூராட்சி சக்கராபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் – சுமித்ரா தம்பதியரின் 2 வயது மகள் மதுமிதா, இன்று (ஜூலை 04) விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறிய பாத்திரத்தைத் தலையில் மாட்டிக்கொண்டார். பெற்றோர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாத்திரத்தை அகற்றினர்.

error: Content is protected !!