News February 9, 2026
திண்டிவனம் அருகே பரிதாப பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு கவுசல்யா(33) என்ற மனைவியும், 11 வயதில் ஓர் மகனும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த குப்பையை கொட்டுவதற்கு, கவுசல்யா வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
Similar News
News February 18, 2026
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

கண்டமங்கலம் ஒன்றியம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2026 – சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (பிப் .18) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News February 18, 2026
வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (பிப்.18) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித் உட்பட பலர் உள்ளனர்.
News February 18, 2026
விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <


