News July 5, 2025
திண்டிவனம் அரசு மருத்துவமனை சாதனை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற சென்ற சிறுமி கோமதி (17) அவருக்கு கையின் எலும்பு வளர்ச்சி குன்றி இருந்தது. அதனை அறுவை சிகிச்சை செய்து 140 நாட்களில் 14 செ.மீ வளர செய்து திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் மருத்துவ குழுவினர்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
Similar News
News July 5, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் ஒன்றியம், தைலாபுரத்தில் இன்று (ஜூலை 5) பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 8, 2025 செவ்வாய்க்கிழமை அன்று பா.ம.க. செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 5, 2025
விழுப்புரம் நகரில் விளம்பர பதாகை வைக்க கட்டுப்பாடு

விழுப்புரம் நகரில் விளம்பர பதாகைகள் வைப்பது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சார்பில் இன்று (ஜூலை 5, 2025) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரகுமார் குப்தா மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <