News November 3, 2025
திண்டிவனத்தில் ரூ.60 கோடி மதிப்பில் மருத்துவமனை!

திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை, இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டது. மீதமுள்ள அனைத்து பணிகளும் 10 நாட்களுக்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
விழுப்புரம்: தவெக தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், தவெக தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணியில் புதிய நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் இன்று(நவ.03) மாலை அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளராக வடிவேல், அமைப்பாளராக பிரித்திவிராஜ், இணை அமைப்பாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 3, 2025
செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவர திருத்தம் பணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 70 செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவர திருத்தம் பணிக்கான கணக்கீட்டு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் இன்று (நவ.03) வழங்கினார். செஞ்சி வருவாய் வட்டாட்சியர் திரு.துறைசெல்வன் உட்பட பலர் உள்ளனர்.


