News December 25, 2025

திட்டக்குடி கோர விபத்து; ஓட்டுநர் கைது

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் பெண் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பேருந்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மதுரை ஒத்தக்கடைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தாஹா அலி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Similar News

News January 1, 2026

கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணியின் போது, தொகுதி விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் உள்ள 46,191 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

கடலூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்!

image

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த அஜித் (25). இவர் 16 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஜித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

கடலூர்: நகை திருடிய இளைஞர் அதிரடி கைது

image

சிதம்பரம் அருகே நற்கவந்தன்குடியை சேர்ந்தவர் செளந்தர்ராஜன்(51). கவரிங் கடையில் வேலை பார்க்கும் இவர், ரூ.3 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகளை தனது பைக்கில் வைத்துவிட்டு, மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது, மர்மநபர் கவரிங் நகைகளை திருடி சென்று விட்டார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து கவரிங் நகைகளை திருடிய கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள்(30) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!