News March 30, 2025

திட்டக்குடி அருகே வாலிபர் போக்சோவில் கைது 

image

திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தைச் சேர்ந்த தமிழரசன் (22), என்பவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியும், கடந்த 27ஆம் தேதி பஸ்சில் சென்ற போது, அருகில் அமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்நிலையில் புகார் வந்ததையடுத்து, திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்த தமிழரசனை போக்சோவில் செய்துள்ளனர். 

Similar News

News April 3, 2025

கடலூரில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு?

image

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

கடலூரில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Branch Intern)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 2, 2025

கடலூர் அருகே ஒருவர் என்கவுண்டர்

image

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!