News April 14, 2025
திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News April 15, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உட்கோட்ட பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 15, 2025
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பலி

திருவள்ளூர், கனகம்மாசத்திரம் அருகே காவேரி ராஜபுரம் கிராமத்தில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் முனிரத்தினம் என்பவரை டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போடக் கூறியுள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *மின்சாரத்தை கையாளுவதை தவிர்க்கவும்*
News April 15, 2025
திருவள்ளூர்: கடன், நோய் தீர்க்கும் திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோவிலில் வந்த முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*