News October 31, 2024
திடீரென ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர்

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், செயல்பட்டு வரும் 108 அவசரகால மேலாண்மை மையத்தில் (108 Emergency Response Center) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (30.10.2024) ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன் ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.
Similar News
News September 12, 2025
சென்னை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விண்ணப்பப் படிவங்கள் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும், உரிய முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 12-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 12, 2025
சென்னை: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு

சென்னை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
பனையூரில் TVK பிரச்சார வாகனம் தயார்!

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பனையூரில் விஜயின் பிரச்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது. அந்த வாகனத்தில் எம்.ஜி.ஆர், அண்ணா படம் இடம் பெற்றுள்ளது.