News April 25, 2024
திசையன்விளை: சதம் அடித்த வெயில்

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் நீடிக்கிறது மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போது அக்னி நட்சத்திரம் வெயில் போல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தொடர்ந்து தினமும் மாவட்ட முழுவதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் இன்று திசையன்விளை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது.
Similar News
News November 10, 2025
நெல்லை போலீஸ் தேர்வில் 691 பேர் ஆப்சென்ட்

நெல்லையில் போலீஸ் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் அனுமதிக்கபட்ட 4905 பேரில் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 4214 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்காதவர்கள் 691 பேர் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
News November 10, 2025
நெல்லை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

நெல்லை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 10, 2025
நெல்லை: 500 கிலோ வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த ஆளில்லாத வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


