News January 17, 2026

திங்கள்கிழமை.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

image

₹3,000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசை இதுவரை 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் பொங்கலுக்காக ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் பரிசை பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.19) முதல் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு விநியோகம் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 30, 2026

முதல் போட்டியிலேயே தடுமாறும் மஞ்சள் படை!

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் CSK வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டி வருகின்றனர். உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் ஆகியோர் தலா 6 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன்பிறகு களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால், 20 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து CSK தடுமாறி வருகிறது.

News March 30, 2026

தவெக கட்சியினர் பால்வாடிகள்: சேகர் பாபு

image

விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தவெகவின் செயல்பாட்டை சேகர் பாபு கிண்டலடித்து பேசியுள்ளார். பிரசாரத்துக்கு எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்பது கூட தெரியாத பால்வாடிகள்(தவெகவினர்) என விமர்சித்த அவர், இவர்கள் எப்படி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்பார்கள் என சாடியுள்ளார். மேலும், மே 4-ம் தேதி அனைத்துக்கும் தீர்ப்பு கிடைத்துவிடும் என்றார்.

News March 30, 2026

நடிகை ஜனனிக்கு டும் டும் டும்❤️❤️

image

அவன் இவன், தெகிடி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஜனனி வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அவர் தனது காதலரான சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்துகொண்டார். காதல் கணவருடன் இருக்கும் போட்டோக்களை ஜனனி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!