News March 27, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

Similar News

News March 31, 2026

திருப்பத்தூர்: செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News March 31, 2026

IPL டாஸ்: GT பேட்டிங்

image

GT-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற PBKS, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. நியூ சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரேயஷ் தலைமையிலான PBKS அணி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல், கில்லின் GT-யும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பலமாக உள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

News March 31, 2026

பற்கள் மஞ்சளா இருக்கா? நீங்களே சரி செய்யலாம்!

image

பற்கள் மஞ்சளாக இருப்பதால் வாய் திறந்து பேசக்கூட சங்கடப்படுகிறீர்களா? கவலைய விடுங்க. இதனை வீட்டிலேயே சரி செய்யலாம். ➤ஒரு டீஸ்பூன் உப்புடன் சில துளிகள் எண்ணெய் கலந்து, பிரஷ் பயன்படுத்தி பற்களில் ஒரு வாரம் தேய்க்கவும். ➤அல்லது எலுமிச்சை / ஆரஞ்சு பழத்தோலையும் பற்களில் தேய்க்கலாம். இவற்றை தொடந்து செய்துவர மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சென்று ஆகும் என்கின்றனர். பலருக்கு பயனளிக்க SHARE THIS.

error: Content is protected !!