News February 26, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி, <<19236842>>குமரி, தென்காசி, நெல்லையை<<>> தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும், மாசி மக திருவிழாவையொட்டி மார்ச் 2-ல் (திங்கள்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
ஈரானுடன் நீண்ட போர் இருக்காது: ஜே.டி.வான்ஸ்

ஈரான் மீது தாக்குதல் நடந்தாலும், அது நீண்ட போராக இருக்காது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதை தடுக்க டிரம்ப் நிர்வாகம் ராணுவ மற்றும் ராஜதந்திர உத்திகளை பரிசீலித்து வருவதாகவும், கடந்த காலத்தில் ஈராக் போர் போன்ற தவறுகள் மீண்டும் நிகழாது என்றும் அவர் கூறினார். மேலும் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறினார்.
News February 28, 2026
வரலாற்றில் இன்று

*1986 – சுவீடன் பிரதமர் ஓலாஃப் பால்மே சுட்டுக் கொல்லப்பட்டார். *2002 – குஜராத் வன்முறையில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர். *2006 – சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். *1921 – தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமன் பிறந்த தினம். *2003 – தமிழ் நடிகர் மேஜர் சுந்தரராஜன் மறைந்த நாள். *ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
News February 28, 2026
வாயு தொல்லையா? இந்த பழங்களை தவிர்க்கவும்

நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை உள்ளவர்கள் சில பழங்களை அடிக்கடி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, மாங்காய், புளிப்பு திராட்சை ஆகியவை அமிலத்தன்மை அதிகம் கொண்டதால், வயிறு பிரச்னை உள்ளவர்கள் அளவாக உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பழங்களில் உள்ள அமிலத்தன்மை வாயு & நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். தொடர்ந்து வாயு தொல்லை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


