News December 15, 2025
திகார் ஜெயிலை இடமாற்ற டெல்லி அரசு முடிவு

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஜெயிலாக அறியப்படும் டெல்லியின் திகார் ஜெயிலை வேறு இடத்திற்கு மாற்ற பணிகள் நடந்து வருவதாக டெல்லி CM ரேகா குப்தா தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது இங்கு 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அதிகமாக உள்ளனர்.
Similar News
News March 2, 2026
BREAKING: தக்காளி விலை மளமளவென குறைந்தது

கடந்த மாதம் 1 கிலோ ₹40 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை தற்போது மளமளவென குறைந்துள்ளது. கரூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10 – ₹12 வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் 1 கிலோ தக்காளி ₹12 – ₹15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வரத்து அதிகரிப்பே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
News March 2, 2026
CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது
News March 2, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


