News November 30, 2024

தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

ஃபெங்கல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களின் சில நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

சென்னை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News December 11, 2025

சென்னை: திரைப்பட பாணியில் பிரபல ரவுடி கைது!

image

சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி பினு, சூளைமேட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த 75 பேரை சுற்றி வளைத்து பினுவை, போலீசார் நேற்று (டிச.10) கைது செய்தனர்.

News December 11, 2025

சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

image

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.

error: Content is protected !!