News November 23, 2025
தாளவாடி அருகே சோகம்! முதியவர் உயிரிழப்பு

தாளவாடி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெள்ளையா (65) இவர் அருகிலுள்ள தமிழ்புரம் பகுதிக்கு ரோடு போடும் வேலைக்காக சென்றுள்ளார். அங்கிருந்த தொழிலாளர்களிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி குட்டைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் தொழிலாளர்கள் குட்டைக்கு சென்று பார்த்த போது பெள்ளையா இறந்து கிடந்துள்ளார். தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News January 30, 2026
சென்னிமலை அருகே கொடூரக் கொலை சம்பவம்!

சென்னிமலை யூனியன் ஈங்கூர் செங்குளம் அம்மன் நகரைச் சேர்ந்த மதன்குமார்(26), மதுபோதையில் தம்பி சக்திவேலுடன்(25) தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சக்திவேல், அண்ணனை அடித்து கீழே தள்ளி, ஹாலோ பிளாக் கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்தார். விபத்து போல நாடகமாடிய சக்திவேலை, சென்னிமலை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 30, 2026
அந்தியூர் அருகே சாக்கடையில் விழுந்து தொழிலாளி பலி.

அந்தியூர் கொல்லபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவர் அந்தியூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்தியூர் கொல்லபாளையம் சாலையில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வேகத்தடையில் ஏறி நிலை தடுமாறி அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


