News June 15, 2024
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி: ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் வரும், 18 – 26 வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதரவற்ற விதவை சான்றிதழ் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்றிதழ் பெற மனுக்கள் தரலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
சேலம்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 1, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News March 1, 2026
சேலம் அருகே பேருந்து மோதி ஒருவர் பலி

சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த சௌந்தரராஜன் (27), இன்று அயோத்தியாபட்டணம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுக்கம்பட்டி மயானம் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


